தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நிகழும் பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறும், கூடிய விரைவில் இலங்கையை விட்டு வெளியேறி வருமாறும் குவைத் வெளிவிவகார அமைச்சு இலங்கையில் தங்கியிருக்கும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள குவைத் நாட்டினர் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கையில் உள்ள குவைத் துாதரகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கோரியுள்ளது.
தூதரக அவசர தொலைபேசி: 0094773300077
அமைச்சகத்தின் அவசரக் கோடுகள்: 0096522225540 – 0096522225541