பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 13 அன்று பொல்துவ சந்தி போராட்ட களத்திற்கு கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றிச் சென்ற பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கரவண்டி மீது போராட்டக்காரர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டதை அடுத்து வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த பல பொலிஸாரை தாக்கி கண்ணீர் புகை குண்டுகளை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒபேசேகரபுர பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை அடுத்து பொரளையில் உள்ள அவரது வீட்டில் இருந்து 50 கண்ணீர் புகை குண்டுகளை மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் பொலன்னறுவை பிரதேசத்தில் வசிப்பவர் மற்றும் தொழிலில் கொத்தனார் ஆவார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.