Ads Area

ஜனாதிபதி தெரிவில் வாக்களிக்க எம்.பி.க்களுக்கு சமூக வலைதள மிரட்டல்கள்: விசாரணைக்கு உத்தரவு

இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அத தெரண தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பாராளுமன்றத்திற்கு செல்வதற்கும் வருவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும், எந்தவொரு தடையாக இருந்தாலும் அது அவர்களின் பாராளுமன்ற சிறப்புரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe