தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக வெற்றிகரமாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலைக்குள் 1,000,000 ஐ தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறை நேற்று முந்தினம் அறிமுகம் செய்யப்பட்டதுடன், பல வாகனங்களை இயக்கும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வர்த்தகப் பதிவு இலக்கத்தைப் பயன்படுத்தி தமது முழு வாகனங்களையும் பதிவு செய்யும் வகையில் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேற்படி முறைமை சரிபார்த்த பிறகு ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என்றார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.