ஷார்ஜாவின் அல் தவான் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 11வது மாடியில் இருந்து வியாழக்கிழமை இரவு விழுந்து 46 வயதான இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவித்த ஷார்ஜா பொலிஸார் குடிபோதையில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அந்த நபர் தனது குடும்பத்தினரை மாடியிலிருந்து தள்ளி கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அவரது தற்கொலை மிரட்டல் குறித்து குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர், ஆனால் போலீசார் வருவதற்கு முன்பே அவர் குதித்து இறந்து விட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த அந்த நபர் தனது குடும்பத்துடன் அடிக்கடி பிரச்சினைகளை செய்து வந்ததாகவும் தனது மகளுடன் சேர்ந்து தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதாகவும் அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜா காவல்துறையினர் தற்போது மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.