ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெருமவும் அவரது பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல் மற்றும் இராணுவம் மற்றும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உட்பட அனைத்து தனியார் காணிகளையும் விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இணங்கியுள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும், ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏனைய சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு டளஸ் மற்றும் சஜித் இருவரும் இணக்கம் தெரிவித்திருந்தனர், இது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே ஜனாதிபதி தேர்தலில் டலஸுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.