சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் காழி நீதிமன்ற வளாகத்தினை சிரமதானம் செய்யும் நிகழ்வு 2022/08/27ம் திகதி (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து சம்மாந்துறை ROYAL MADRIT விளையாட்டு கழக வீரர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலக வெளிக்களப்பிரிவு பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் A.A.C NIZAM அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் விளையாட்டு உத்தியோகத்தர் L.SULAKSAN மற்றும் கலாசார உத்தியோகத்தர் A.M Aarif அவர்களும் சம்மாந்துறை ROYAL MADRIT விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் A.A.M THANIS மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் M.T.M RISA அவர்களுடன் இணைந்து நிர்வாகிகள் மற்றும் கழக வீரர்களும் பங்கு பற்றியிருந்தனர். இந்நிகழ்வின் இறுதி அம்சமாக மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.