சவுதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம் அறிக்கையை பிறப்பித்துள்ளது. அதாவது புதிய விதுமுறையான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி) நாட்டு குடியிருப்பாளர்களுக்கு சவுதியின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் இ-விசா விண்ணப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அது போல UK அமெரிக்க அல்லது SCHENGEN நாடுகளில் ஒன்றிலிருந்து செல்லுபடியாகும் சுற்றுலா அல்லது வணிக விசா பெற்றவர்கள், சவுதிக்குள் நுழைய ஆன் அரைவல் விசா தொடர்ந்து பொருந்தும். இந்த புதிய உத்தரவு சவுதிக்குள் நுழைவதற்கு முன்பு பார்வையாளர்கள் நாட்டின் தூதரகத்திற்குச் செல்ல வேண்டிய அவ௫யமில்லை, இது பயணிகளுக்கு மிகவும் எளிமையான பயணத்தை அனுமதிக்கி றது.
சவுதியின் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல் கதீப் கூறியதாவது: சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை மேம்படுத்துவதே தற்போதையை குறிக்கோளாக உள்ளது. டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் பயணிகளின்பயணத்தை சீராக்குவதன் மூலம், சவுதி அனைத்து மூலைகளிலிருந்தும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்கிறது.
2030 ஆண்டுக்கான நோக்கத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறோம். இதன் மூலம் நாங்கள் ஒரு நிலையான, நெகிழ்வான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சுற்றுலாத் துறையை உருவாக்க உள்ளோம். சுற்றுலா, கலாச்சாரங்களையும் சமூகங்களையும் இணைகிறது. மேலும்
இதன் எதிர்காலத்தை நாங்கள் ஒன்றாகக் கட்டியெழுப்புவதுலும், அமைச்சகத்தை வழிநடத்துவதிலும் பெருமைப்படுகிறேன்.
செய்தி மூலம் - https://www.khaleejtamil.com