இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள யூரியா உரத்தின் 21,000 மெற்றிக் தொன் உரத்துடனான இரண்டாவது கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்தியாவிடமிருந்து முதல் தொகையாக 44,000 மெற்றிக் தொன் ஏற்கனவே நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் மேலும் 21,000 மெற்றிக் தொன் உரம் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ள யூரியா உரத்தின் மொத்த பெறுமதி 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலனா பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றின் ஊடாக இலங்கை மக்களின் உணவுத் தேவையை கருத்திற்கொண்டும் விவசாயிகளின் நன்மை கருதியும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.