சர்வதேச ரீதியில் இடம் பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றியீட்டிய சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரி மாணவியை பாராட்டும் நிகழ்வு கல்லுாரியில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரி மாணவியான றஸீதா பர்வீன் சங்க இலக்கிய ஆய்வு நடுவம் ஸ்கொட்லாந்து நடாத்திய 11- 16 வயதினருக்கிடையிலான இந்தியா மலேசியா கட்டார் இலங்கை அமெரிக்கா இங்கிலாந்து ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்ற "சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு" எனும் தலைப்பில் இடம்பெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு பாடசாலைக்கும், சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பேச்சுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவி அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரி அதிபர்-ஆசிரியர்களினால் மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.