Ads Area

கல்முனை கல்வி,கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.


 (நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி,கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால் (ECDO) ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம், கல்முனை பள்ளி ஒழுங்கையில் அமைந்துள்ள எக்டொ(ECDO) நூலகத்தில் (15) சனிக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின் (ECDO) அறிமுகத்துடன் ஆரம்பமான இரத்ததான முகாமனது, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரகுமானின் வழிகாட்டலில் வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கே.வித்யா தலைமையிலான இரத்த வங்கி பிரிவினரினால் இரத்ததான நடவடிக்கைகள் இடம்பெற்றது.

கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின் தலைவர் எம்.எம்.ரிஸ்கான், செயலாளர் எஸ்.எம்.நபீல்,
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்று பொறியியலாளரும், அமைப்பாளருமான இசட்.ஏ.எம்.அஸ்மீர் ,பொருளாளர் எம்.வை.எம்.சியாம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

குறித்த இரத்ததான முகாமில் அதிகமான ஆண்கள், பெண்கள்,இளைஞர்கள்,பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. கல்வி,கலாச்சார மேம்பாட்டு தாபனமானது (ECDO) சுமார் 20 வருட காலமாக கல்முனையில் பல்வேறுபட்ட சமூக  நல பணிகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe