Ads Area

அரச பல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் மாவட்டக்கிளை உதயம்.

 


நூருல் ஹுதா உமர்


தேசிய அரச பல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்ட அரச பல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் மாவட்டக்கிளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாகவும் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் கௌரவ அதிதியாகவும் கல்முனை பிராந்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் மற்றும் பிராந்திய வாய் சுகாதார பிரிவின்  பற்சிகிச்சை நிபுணர் எம்.எச்.எம். சரூக் சிறப்பு அதிதிகளாகவும் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித்; சங்க உறுப்பினர்களின் நலன்புரி விடயங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை வாய்ச் சுகாதார பிரிவின் ஊடாக பிராந்திய மக்களுக்கு உச்ச சேவையினை வழங்குவதற்கு நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe