Ads Area

சம்மாந்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு தொழில்வாய்பு.

 சம்மாந்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு தொழில்வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரையின் பேரில் பல்வேறு வேலைத்திட்டங்களை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய கொரிய மொழிக் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இக்கற்கை நெறிக்காக விண்ணப்பித்தவர்களுடனான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் அமீர் அலி பொது நூலக கேட்போர் கூடத்தில் (01)நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.
கொரிய மொழி போதனாசிரியர் வை.வீ.எம்.நபாஸ் அவர்கள் கலந்துகொண்டு இக்கற்கை தொடர்பான விளக்கத்தினை மாணவர்களுக்கு வழங்கினார்.
இதில் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம்.ஹனீபா, பிரதேச சபையின் கொரிய கற்கை நெறிக்கான இணைப்பாளர் ஐ.எல்.சப்றி, மாணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கற்கை நெறியை விரைவாக ஆரம்பிக்கவுள்ளமையினால் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் பதிவினை மேற்கொள்ள தவறியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் எதிர்வரும் 2022.11.06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னர் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
மேலதிக தகல்களை பெற்றுக் கொள்வதற்கு சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையத்திற்கு 067 20 30 800 அல்லது இக்கற்கை நெறிக்கான இணைப்பாளர் ஐ.எல்.சப்றி (077 230 9246) ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
0672030800



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe