Ads Area

மாட்டு வண்டி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாகப் பலி

 


 பாறுக் ஷிஹான்


 மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


 அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.


 இச்சம்பவமானது வயல் வேலைக்காகச் சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபர்  மோதியுள்ளார்.


 இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.


 அத்துடன், மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு வண்டிலின் சக்கரம் உடைந்து சேதமடைந்து, மாட்டினது கால்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


 இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது 12 ஐச் சேர்ந்த ஜமால்தீன் ஹாறூன் (வயது 42) என்பவராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.


 விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி  விசாரணைகளை மேற்கொண்டார். இதன் பின்னர் மரணமடைந்தவரின் பிரேதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 இவ்விபத்துக்குறித்து நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 இன்று காலை விபத்து நடைபெற்ற நிந்தவூர், மாட்டுப்பள்ளை பிரதான வீதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe