Ads Area

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தர்கள் வாழ முடியாது என்று எந்த சட்டமும் இல்லை - சரத் வீரசேகர

 வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில்  ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.


பௌத்தர்கள் வாழ்வதற்கான உரிமை 

அவர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட அந்தந்த இடங்களில் சிறிய மற்றும் பெரிய ஆலயங்களை அமைத்திருக்கின்றார்கள். அதேபோல் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பௌத்தர்கள் வாழ்வதற்கு முழு உரித்தும் உண்டு.


வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தர்கள் வாழ முடியாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை.


வடக்கில் பௌத்தர்கள் வாழ்கின்றார்கள். இராணுவத்தினர் இருக்கின்றார்கள். அவர்கள் வழிபட விகாரைகள் அமைப்பதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

thanks-tamilwin



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe