Ads Area

பயனுறுதிமிக்க வகையில் பிணக்கை தீர்ப்பதற்க்கு ஆதரவளித்தல் SEDR செயற்திட்டம்.

 நூருல் ஹுதா உமர்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் பிரிட்டிஷ் கவுன்சில் (British council), முஸ்லிம் எய்ட் (Muslim Aid), ஸ்ட்ரைட் (STRIDE) என்பவற்றின் அனுசரனையுடன் நாடளாவிய ரீதியில்  வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் ACTIVE CITIZENS செயற்திட்டத்தின் ஒரு வடிவமான பயனுறுதிமிக்க வகையில்  பிணக்கை தீர்ப்பதற்க்கு ஆதரவளித்தல் SEDR  செயற்திட்டத்தில் ACTIVE CITIZENS - MUTTUR அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமைக்களம் செயற்பாடு கட்டைப்பறிச்சான் சந்தோசபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு இரு சமூகத்தினர் மத்தியில் பொது மைதானம் அமைப்பதில் காணப்படும் பிணக்கு தொடர்பாக இரு சமூகங்கள் மத்தியில் ஒரு மத்தியஸ்தை ஏற்படுத்தி சுமூகமான உறவை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக சேனையூர்  ஸ்ரீகணேசா விளையாட்டு கழகத்துக்கும் சந்தோசபுர ஒலி,ஔி விளையாட்டு கழகத்துக்கும் இடையில் சினேக பூர்வ கிரிகெட் போட்டி 2023.05.01 மாலை சந்தோசபுர புது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில்  சேனையூர் ஸ்ரீகணேசா விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது. அத்தோடு இங்கு இரு அனியினருக்கும் இடையில் சினேக பூர்வ உரையாடல்களும் இடம்பெற்றதோடு இதனை ஏற்பாடு செய்து சுமூகமான உறவை ஏற்படுத்திய ACTIVE CITIZENS மூதூர் குழுவுக்கு நன்றிகளை பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந் நிகழ்வுக்கு விஷேட விருந்தினர்களாக ஸ்ரீகணேசா விளையாட்டு கழக தலைவர்கள் மற்றும் ஒலி ஔி விளையாட்டு கழக தலைவர்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் பழங்குடியின அமைப்பின் தலைவர்  பொருளாளர் மற்றும் இந்த செயற்திட்ட குழுவான ACTIVE CITIZENS - MUTTUR குழு உறுப்பினர்களான ரீ .எம். ஹிஷாம், எஸ். ஹரிசங்கர், என். தாதுர்சன், எம்.எம். இம்ரான் நஸீர், ஏ.எப். ஜில்பானா மற்றும் முஸ்லிம் எயிட், SEDR செயற்திட்ட மாவட்ட இணைப்பாளர்  எம். ரோசிந்தன் என் மெசிந்தர் ஆகியோர் கலந்து கொண்டு  வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe