Ads Area

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள பழக்கடைகள், சில்லறைக்கடைகள், ஹோட்டல் அனைத்திலும் தொடர் பரிசோதனை.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr. KLM. றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் மேற்படி பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றது. 


தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மக்களின் கடின உழைப்பினால் பெறப்படும் பணத்தினை கொண்டு நாளாந்தம் கொள்வனவு செய்யும் அனைத்துப் பொருட்களும் சுகாதாரமானதாகவும் கலப்படமற்றதாகவும் மக்களிடம் சென்றடையவேண்டும் என்ற நோக்கோடும் வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பழக்கடைகளின் தரத்தைப்பேணும் வகையிலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து இடங்களிலும் தொடர்ப்பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 



இதில் மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்கள், இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கருவிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.



மேலும் பொது இடங்களில் புகைப்பதும் புகைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.



உணவுப்பொருட்களை 1 1/2 அடி உயரத்தில் வைத்தே விற்கவேண்டும். 



இவ்வாறு பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் கலந்து தெளிக்கப்பட்ட பழங்களையும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதன் இரசாயன தாக்கதின் விளைவுகளை அறியாமல் அதனை உட்கொண்டு பல நோய்களுக்குள்ளாகின்றனர்.



எனவே, இதனை தடுக்கும்பொருட்டு மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பழங்களில் இரசாயனம் கலந்து தெளிப்பதனையும் இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தகூடிய உபகரணங்களையும் மற்றும் அழுகிய நிலையில் உள்ள பழங்கள் மற்றும் வெடித்த கரட் மற்றும் பச்சை நிறத்துடன் உள்ள உருளைக்கிழங்குகள் என்பவற்றையும்  அதுபோன்ற மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மரக்கறிவகைகளையும் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு நிந்தவூர் சுகாதாரவைத்திய அதிகாரி கேட்டுக்கொள்கின்றார்.

 

இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் KLM றயீஸ், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர், மற்றும் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இப்பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.


‘உணவே மருந்து மருந்தே உணவு’

தகவல் 
Dr.KLM. றயீஸ்
சுகாதார வைத்திய அதிகாரி 

நிந்தவூர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe