Ads Area

ஓட்டமாவடி, கேணிநகரில் சேவல் சண்டைச்சூதாட்டம் : 7 பேர் கைது.



ஓட்டமாவடி, கேணிநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் பல பிரதேசங்களைச்சேர்ந்த சூதாட்டக்காரர்கள் வந்து சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிசாரும் காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்திருந்த பிரபல சேவல் சண்டை சூதாட்டக்காரர்கள் 6 பேருடன் இதற்காக இடம் வழங்கிய கேணிநகர் வீட்டுரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன், சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெறுமதி வாய்ந்த சேவல்கள் 06 உம் ஒரு தொகைப்பணமும் நேற்று 17.06.2023ம் திகதி மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட ஏனையவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


 -ஆதம் றிஸ்வின்-




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe