சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல்.முஸ்தபா அவர்களின் ஆலோசனையின் கீழ் நஜா பவுண்டேசன் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் முதலாம் வருட உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்களின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை உயர் தொழிநுட்பவியல் கல் விநிறுவனத்தின் முன்பாக பிரதான பாதையில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிட புனர்நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.
நிகழ்வில் சம்மாந்துறை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல்.முஸ்தபா, நஜா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எஸ்.எம் நபீல்,சம்மாந்துறை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் ஆங்கில கற்கைத்துறைப் பொறுப்பாளர் எம்.பி.நெளசாட், கணக்கியல்துறை பொறுப்பாளர் பெரோஸ், அதிபர்கள், நஜா பவுண்டேசன் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
முதலாம் வருட உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் பாடத்திட்டத்திலுள்ள சமூக பொறுப்புணர்வு குறித்த குழுச்செயற்றிட்டத்திற்கேற்ப இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


