மக்காவில் உள்ள புனித கஃபா கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கா மாகாண துணை ஆளுநர் இளவரசர் பத்ர் பின் சுல்தான் தலைமை வகித்தார். இரண்டு புனித ஹரம்களின் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ், உயர் அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கஃபாவின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நீரால் சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சவுதி அரசின் சிறப்பு அழைப்பாளராக லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலியும் கஃபா கழுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது பெரும் பாக்கியம் என்றும், இந்த அழைப்பிற்காக சவுதி ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் யூசுப் அலி தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் பதினைந்தாம் தேதி கஃபாவை நீரால் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புனித கஃபாவை நீரால் சுத்தம் செய்வது முஹம்மது நபியின் சுன்னாவாகும். மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் நுழையும் போது, நபி (ஸல்) அவர்கள் நீரால் கழுவினார்கள். கலீஃபாக்களும் அதனை செய்தார்கள். இன்றுவரை அந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது.