Ads Area

சவுதியில் ஹார்ட் எமோஜியை பெண்கள், சிறுமிகளுக்கு அனுப்பினால் அபராதம்-சிறைத் தண்டனை!

 ரியாத்/ குவைத் சிட்டி: வாட்ஸ்அப் அரட்டைகளில் மகிழ்ச்சி, சோகம், அன்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்த எமோஜிகளின் பயன்பாடுகள் உள்ளன. இந்த எமோஜியை அனுப்பும் பழக்கம் உள்ளவர்கள் குவைத் மற்றும் சவூதியில் சற்று கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். 


சமூக வலைதளங்களில் ஹார்ட் எமோஜியை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அனுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியா மற்றும் குவைத் எச்சரிக்கை விடுத்துள்ளன. 


வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடகங்கள் மூலம் சிறுமிகளுக்கு இதய எமோஜிகளை அனுப்புவது குற்றமாக கருதப்படும் என்று குவைத் அறிவித்துள்ளது. இந்த குற்றத்திற்காக பிடிபட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 2,000 குவைத் தினார் அபராதம் விதிக்கப்படும் என்று குவைத் வழக்கறிஞர் ஒருவரை மேற்கோள் காட்டி Gulf News செய்தி வெளியிட்டுள்ளது. 


சவுதி அரேபியாவும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாட்ஸ்அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பினால் சிறைவாசம் ஏற்படலாம். சவுதி அரேபிய சட்டப்படி, இதுபோன்ற குற்றங்களில் சிக்குபவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரியால் அபராதமும் விதிக்கப்படும்.


நாட்டின் அதிகார வரம்பிற்குள் இதுபோன்ற எமோஜிகளை அனுப்புவது துன்புறுத்தலின் வரம்பிற்குள் வரும் என்று சவுதி சைபர் கிரைம் துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற எமோஜிகளைப் பெறும் பெண்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தை மீண்டும் செய்தால், தண்டனையாக 300,000 ரியால்கள் வரை அபராதம் மற்றும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe