ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக கௌரவ சஜித் பிரேமதாஸா அவர்களின் "சக்வல பிரபஞ்சம்" வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயதிற்கு சுமார் ரூபா 50 இலட்சம் பெறுமதியான பஸ் ஒன்றினை வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா எதிர்வரும் 14.08.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு வருகை தரவுள்ளார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா “சக்வல் பிரபஞ்சம்" வேலை திட்டத்தின் கீழ் வழங்குகிற 75 ஆவது பஸ் வண்டியானது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலிருந்து ஆரம்பித்து பழைய கல்முனை வீதி - பூ மரத்துச் சந்தியினூடாக சம்மாந்துறை முஸ்லிம் மஹா வித்தியாலய வளாகத்தினை சென்றடைய உள்ளது.
சம்மாந்துறை மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றார்கள்