Ads Area

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு USF ஸ்ரீலங்கா அமைப்பின் இளைஞர்களுக்கான செயலமர்வுக்கு பிரதம அதிதியாக றிஸ்கான் முகம்மட்.

USF Sri Lanka அமைப்பினால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அமைப்பினுடைய ஸ்தாபக தலைவருமான அ.கபூர் அன்வர் அவர்களின் நெறிப்படுத்தலில் அமைப்பினுடைய தவிசாளர் ஏ.எம். சஹான் அவர்களின் தலமையில்"சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம்" எனும் தொனிப் பொருளில் ஒரு நாள் செயலமர்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நேற்று(12) இடம்பெற்றது.


இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் வரிசைப்படுத்தல் படையின் திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட செயலாளருமான றிஸ்கான் முகம்மட் கலந்து கொண்டதோடு மேலும் அதிதிகளாக முன்னால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் SMA .லத்தீப் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஹமீர் கலந்து கொண்டார்கள்.


இந் நிகழ்வின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பாலியல் நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்  எம்.என்.எம். தில்சான் கலந்து தற்கால இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதனை வெற்றி கொள்வது எவ்வாறு என்பது பற்றி இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஆத்ம ரீதியாகவும் தனது கருத்துக்களை முன் வைத்தார்.


மேலும் USF SriLanka அமைப்பினால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட றிஸ்கான் முகம்மட் அவர்களுக்கும் மற்றும் வளவாளராக கலந்து கொண்ட வைத்தியர்  எம்.என்.எம்.தில்சான் அவர்களுக்கும் நினைவுச் சின்னம் அமைப்பின் செயற்பாட்டாளர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe