சம்மாந்துறையில் பல சமூக நலத் திட்டங்களை தொடர்தேர்ச்சியாக செய்து வரும் OCD அமைப்பின் தலைவரும் விஞ்ஞான முதுமானியுமான அஸ்மி யாசீன் அவர்களின் முயற்சியினால் கட்டி முடிக்கப்பட்ட 10வது வீட்டுத் திறப்பு விழா நிகழ்வும் 11வது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் அண்மையில் இடம் பெற்றது.
OCD அமைப்பின் "யாவருக்கும் உறையுள் - 2030" எனும் தொனிப்பொருளில் இதுவரை அமைப்பின் தலைவரின் முயற்சியினால் 10 வீடுகள் கட்டப்பட்டு அவைகள் ஏழைப் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் 11வது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்று முடிந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.