(எஸ். சினீஸ் கான்)
பொறியாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த 6 வருடங்களாக ரமழான் காலப்பகுதியில் வியூகம்TV ஊடாக நடாத்திவருகின்ற ரமழான் வியூகம் – 2023 போட்டி நிகழ்ச்சியில் ரமழான் முழுவதும் தினந்தோறும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதி அனுப்பிய நேயர்களில் வெற்றியாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.
பொறியாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் நாபீர் பவுண்டேஷன் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சரியான விடையினை அனுப்பிவைத்தவர்களில் குலுக்கல் சீட்டு மூலம் தெரிவானவர்களில் 1ஆம் வெற்றியாளருக்கு 12000 ரூபாய், 2 ஆம் வெற்றியாளர்களுக்கு 8000 ரூபாய் 3ம் வெற்றியாளருக்கு 4000 ரூபாய் வழங்கிவைக்கப்படது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ECM நிறுவனத்தின் பொது முகாமையாளர், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் ACAM இஸ்மாயில் Sir மற்றும் பொறியாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் சிரிஷ்ட புதல்வன் நாபீர் நஸீம் ஆரிப் மற்றும் பொறியாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் பாரியார் M.L.சனாஸியா ஆகியோர் கலந்து சிறப்பித்தோடு வெற்றியாளர்களையும் தெரிவு செய்தனர்.