சமீப ஆண்டுகளாக சவுதி அரேபியா வெளிநாட்டினரின் வேலைவாய்ப்புக்கான மிகவும் பிரபலமான இடமாக உருவெடுத்துள்ளது. ECA இன்டர்நேஷனல் கன்சல்டன்சியின் புதிய ஆய்வில் (My Expatriate Market Pay Survey) வெளிநாட்டவர்களின் சம்பளம் மத்திய கிழக்கு நாட்டில் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வின் படி, சவுதி அரேபியா அதிக சம்பளம் வழங்கும் நாடாக மீண்டும் மாறியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் நிலைமைகள் குறித்த ஆய்வில், உலகிலேயே நடுத்தர மேலாளர்களுக்கு (Managers) அதிக சம்பளம் வழங்கும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. சிறந்த பலன்களை எதிர்பார்க்கும் வெளிநாட்டினரின் இறுதி இடமாக சவுதி அரேபியா மீண்டும் உருவெடுத்துள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது.
நாட்டிலுள்ள ஒரு வெளிநாட்டு நடுத்தர மேலாளர் சராசரியாக ஆண்டுக்கு £83,763 (ரூ. 88,58,340) சம்பளம் பெறுகிறார், இது இங்கிலாந்தை விட £20,513 (ரூ. 21,69,348) அதிகம் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும், சவுதி அரேபியா இன்னும் அதிக ஊதியத்தைக் கொண்டுள்ளது.