சம்மாந்துறை அல் ஹம்றா வித்தியாலய அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த S.H. முஹம்மட் பரீஸ் அவர்கள் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி SMMS.உமர் மெளலானா அவர்களினால் நியமிக்கப்ட்டு தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் தற்போது பிரதி அதிபராக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகிறார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலய நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் PMY. அறபாத் முகைடீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
புதிய அதிபரை பாடசாலை சமூகம் வாழ்த்தி வரவேற்கிறது.
மேலும் இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய A.முகம்மட் ரிஸ்வான் அவர்கள் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.