Ads Area

ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்துக்குத்தெரிவு.

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிய கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.


கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 19ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


இப்போட்டியில், 20 வயதின் கீழ்ப்பிரிவு ஆண்களுக்கான 200M, 400M ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய எஸ்.எம்.அஜாத் மூன்றாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவாகியதுடன், 20 வயதின் கீழ்ப்பிரிவு ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டி ஜே.புதைர் அஹ்மட் இரண்டாமிடத்தையும், 20 வயது கீழ்ப்பிரிவில் ஆண்களுக்காக அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்தனர். 


இவ்வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், மாணவர்களை வழி நடாத்தி பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள், மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் பழைய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe