சம்மாந்துறை அல்-மர்ஜான் தேசிய பாடசாலை மாணவத் தலைவிளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை நிகழ்வு அண்மையில் அல்-மர்ஜான் பாடசாலை வளாகத்தில் அண்மையில் (17) இடம் பெற்றது.
இந் நிகழ்வானது பாடசாலை ஒழுக்கற்று குழுவின் ஏற்பாட்டில், MM. நௌபல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அதிபர் HM. அன்வர் அலி அவர்களும் விசேட அதிதிகளாக உதவி அதிபர் அஷ்ஷைக் ARM. உவைஸ் நளீமி அவர்களும், பிரதி அதிபர் ULA. றஷீட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் வளவாளராக தலைமைத்துவ பயிற்றுவிப்பாளர் மேஜர் KM. தமீம் சேர் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வை பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவின் இணைப்பாளர் ஆசிரியர் CM.தில்சாத் வழிநடாத்தினார்கள். ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர்களான ACM. முஸ்தபா, HM.ஜௌசன் ஸகிய்யா, MMU. பௌசியா , UK. சதகதுல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.