2023/2024 மகா போகத்திற்கான நீர் வினியோகத்தை இலகு படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைய சம்மாந்துறை பிரதேச விவசாயப் பிரிவு பகுதிகளில் உள்ள பல ஆறுகள், வடிகால்கள் போன்றவற்றினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் சம்மாந்துறை பெரியவெளி விவசாய அமைப்பினரின் வேண்டுகோளின் அடிப்படையில் குறுனல் கஞ்சி ஆற்று பண்டினை பலப்படுத்தும் வேலைத் திட்டம் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் தேசமானிய அல்ஹாஜ் M.S.M.நவாஸ் அவர்களின் அறிவுருத்தலுக்கமைய பொறியியல் உதவியாளர் A.M.M.மாஹிர் அவர்களின் வழிகாட்டுதலில் தொழினுட்ப உதவியாளர் M.I.M.அக்தார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
ஊடகப் பிரிவு
பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம்
சம்மாந்துறை.