தகவல் - எம்.ஐ.எம். முஜீப்.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஹுதா சமுர்த்தி வங்கியில் தேசிய வறுமை ஒழிப்பு வார ஆரம்ப நிகழ்வுகள் 2023/10/17ம் திகதி சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சமுர்த்தி வங்கியில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் சேமிப்பு மற்றும் புதிய கணக்குகள் திறந்து புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கைகளும் .தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கிவைக்கும் நிகழ்வுகளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்கள் செயலாளர் களுக்கு வங்கி மேம்பாடு சம்மந்தமாகவும் விளக்கமளிக்கப்பட்டது .
இந்நிகழ்வுகளில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் S.L.முஹம்மது ஹனிபா சேர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதில் விசேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் U.M.அஸ்லம் அவர்களும்,கௌரவ அதிதிகளாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் அல்ஹாஜ் U.L.M.சலீம் மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் S.M.அம்ஸார் .திட்ட முகாமையாளர் A.L.M.ஹமீட் மற்றும் சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் M.A.யாசின்வாவா வவய உதவி முகாமையாளர் A.C.காலீத் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர்கள் செயலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.