குவைத்தில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் 300 தினார் அபராதம் மற்றும் மூன்று மாத சிறை.
குவைத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்தது.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் தண்டனைகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய திருத்தத்தின்படி, இதுபோன்ற சட்டங்களை மீறுவோருக்கு எதிராக 300 தினார் அபராதமும் 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
சாலைகளில் சட்டப்பூர்வ வேக வரம்பை மீறுபவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 500 தினார் அபராதம் விதிக்கப்படும்.
நாட்டின் வீதிகளில் பழைய வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிரான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும் போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முன் இருக்கையிலோ, பின் இருக்கையிலோ சீட் பெல்ட் அணியாமல் அமரச் செய்தால் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து காவல்துறையின் அனுமதியின்றி வாகனத்தின் உடலமைப்பு மாற்றியமைத்தல், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், சிவில் பாதுகாப்பு, காவல்துறை மற்றும் அரசாங்க வாகனங்களுக்கு வழிவிடாமல் புறக்கணித்தல் போன்ற குற்றங்களுக்கும் 250 முதல் 500 தினார் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா