Ads Area

சவுதி அரேபிய பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுடனான சந்திப்பில் ஐ.எல்.எம். மாஹிர்.

சம்மாந்துறை அன்சார்.


சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் முக்கியஸ்த்தருமான ஐ.எல்.எம். மாஹிர் சவுதி அரேபிய ரியாத் நகரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான இமாம் முஹம்மத் இப்னு சவுத் இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் (Imam Mohammad Ibn Saud Islamic University) கல்வி பயிலும் இலங்கை மாணவர்களோடு சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.


இமாம் முஹம்மத் இப்னு சவுத் இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் (Imam Mohammad Ibn Saud Islamic University) கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் அழைப்பின் பெயரில் சென்ற ஐ.எல்.எம். மாஹிர் மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் அறிந்து கொண்டு, பல்கலைக்கழகத்தினையும் பார்வையிட்டார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe