Ads Area

சிறப்பான சேவையினை முன்னெடுப்பதற்காக சம்மாந்துறை பிரதேச செயலாளர் கௌரவிப்பு.

சம்மாந்துறையில் சிறப்பான சேவையினை முன்னெடுப்பதற்காக Islamic Relif sri lanka அமைப்பினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனீபா மற்றும் குழுவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.


சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர் மற்றும் குளிவினரால் கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இடர்பாட்டினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக சம்மாந்துறை பிரதேச மக்களது  வாழ்வாதார மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


அதிலும் குறிப்பாக Islamic Relif sri lanka எனும் அரச சார்பற்ற சர்வதேச அமைப்பினால் கடந்த ஆண்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


1. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் வாழ்வாதாரம் - 40 குடும்பங்கள்.


2. குடிநீர் இணைப்பு மற்றும் மலசலகூடம் அமைத்தல்


3. செந்நெல் சாஹிறா பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டம்


4. மாணவர்களுக்கான கற்றலுக்குரிய பண உதவி - 1285 மாணவர்கள்


5. I -live அடுத்த மூன்றாண்டுக்கான  வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் - 125 குடும்பங்கள்.


இச் செயற்திட்டங்களுக்காக இதுவரை 35  மில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது. 


அரச உதவிகளுக்கு அப்பால் சம்மாந்துறை பிரதேச மக்களின் வாழ்வாதார,  கல்வி மேம்பாட்டிற்கென இந்நிறுவனங்களின் தெரிவாக சம்மாந்துறை பிரதேசம் காணப்படுவது,  அவர்களால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமைத்துவம், வழிகாட்டல்களுடன் அவரது குழுவினர் வழங்கி வரும் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும்.


இச் செயற்பாடுகளுள் ஒன்றான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் வாழ்வாதார (40 குடும்பங்கள்) திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியமைக்காக  Islamic Relif sri lanka அமைப்பினால் பாராட்டப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். 


ஊடகப் பிரிவு





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe