அம்பாறை மாவட்ட பொலிஸ் டிஐஜி அவர்களின் வழிகாட்டலில் "போதைப்பொருள் புனர்வாழ்வு" நிகழ்ச்சி இன்று சம்மாந்துறை ஐனாதிபதி விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பொலிஸ் உயர் அதிகாரிகளான டிஐஜி,எஸ்.எஸ்.பி, அம்பாறை, சம்மாந்துறை , நிந்தவூர், காரைதீவு,சவளக்கடை, மத்திய முகாம் போன்ற நிலைய பொறுப்பதிகாரிகளும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கு பொறுப்பாளர் எ.அப்துல் சலாம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் செந்தில் தொண்டமான் தொடர்ந்து உரையாற்றும் போது போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் திட்டத்திற்காக நிதியுதவி வழங்குவதாகவும் , இதனைப் போல் இலங்கையில் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் நடைமுறை படுத்த வேண்டும் என தொடர்ந்து கருத்து தெரிவித்தார்.