பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சட்டத்தரணி SMM முஷாரப் அவர்களின் வழிகாட்டலிலும் பங்களிப்பிலும் ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த நிவாரண உதவியின் மூலம், பொத்துவில் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, ஐயாயிரத்து ஐநூற்று ஐம்பது (5550) பேருக்கான சமைத்த உணவுப் பொதிகள் நேற்றைய தினம் (11.01.2024) வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினமும் பொத்துவிலின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலையால் தோன்றியுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனர்த்தங்களால் அவதிப்படும் மக்களுக்கு உதவும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் அவர்களின் வழிகாட்டலிலும் பங்களிப்பிலும் ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த நிவாரண உதவி, தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்களை வழங்கும் நோக்கில் துரிதமாக களத்தில் இயங்குகிறது.
சீரற்ற காலநிலையால் தோன்றியுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக நமது சொந்தங்கள் பலரும் தமது உறைவிடங்களை விட்டு அகல வேண்டியேற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்கள் ஒருவேளை உணவுக்காக அல்லல்படுகின்றனர்.
அவர்களின் பசியைப் போக்க நம்மாலான உதவிகளைச் செய்வோம். உதவி செய்வதற்கான சரியான தருணம் இதுதான்.
உள்ளவர்கள், இல்லாதவர்களுக்கு தம் ஆத்மார்த்மான உதவிகளை வழங்கிவிட பொருத்தமான தருணமே இது.
இந்த மக்களின் பசி போக்கும் பயணத்தில் பங்களிப்புச் செய்ய நாம் உங்களையும் அழைக்கிறோம்.
அனர்த்த நிவாரண உதவிக்கு பங்களிப்பு செய்ய ஆர்வமுள்ள நலன் விரும்பிகள், பின்வரும் தொடர்பிலக்கங்களை தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் பணமாகவோ அல்லது பொருளாகவோ உங்கள் உதவிகளை அவதியுரும் மக்களுக்கு வழங்க முடியும்.
MHA Wahab Teacher: +9475 225 5618
M. Hameed Moulavi: +9477 514 3353
YL Niyas Coordinator: +9477 611 7518
நன்றி.