அடிக்கடி களியோடை இவ்வாறு பெருக்கெடுத்து தொடர்ந்தும் இவ்வாறான வெள்ளப் பெருக்கின் போது நீரில் மூழ்குவதும் பின்னர் சீரமைப்பதும் வழமையாகிவிட்டது.
தென்கிழக்கின் பிரதான கல்விச் சொத்தான எமது பல்கலைக்கழகத்தை நாசமடைவதை நல்ல மனம் படைத்த யாரும் அனுமதிக்க முடியாது.
வேறு ஒரு பிராந்திய நிறுவனம் இவ்வாறு பாதிக்கப்படும் போது ஆலோசனை சொல்லும் அருகதையில் உள்ள எமது பல்கலைக்கழகம், தனது சொந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவசரமாகவும் கண்டிப்ப்பாகவும் அக்கறை கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம்?
பல்கலைக் கழகத்தின் இடது புறமாக (வடக்கே) களியோடை ஆறு கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருந்து சுமார் 1,500 M பயணித்து பாரிய அளவு நீரை கடலில் சேர்க்கிறது.
இவ்வாறான வெள்ள நீர் பெருக்கெடுப்பின் போது களியோடையின் உச்ச நீர்மட்டத்தை கணித்து அதற்கேற்ற வகையில் பல்கலைக்கழக வளாகத்தை பாதுகாக்கும் பொருட்டு களியோடைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் அணை ஒன்றை அமைக்கா முடியும்.
அதற்கான முதற்கட்ட முயற்சியாக இந்த அனர்த்த நிலைமையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்ப பணிகளை தொடங்கி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனை மற்றும் நிதி உதவியை பெற முடியும்.
சமகால பல்கலைக்கழக நிருவாகம் இந்த சவாலை எற்க வேண்டும்.
Kaleerur Rahman - kalmunai.