நாபீர் பவுண்டேஷனின் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கிராமத்துக்கு கிராமம் மக்கள் தெளிவூட்டும் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று நாபீர் பவுன்டேஷனின் சம்மாந்துறை உள்ளுராட்சி சபை வேட்பாளர் சகோதரர் அப்துல் றசூல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் தனித்து களமிறங்குவது தொடர்பான கருத்துக்களும் கேட்டறியப்பட்டதுடன் தேர்தல் சம்மந்தமான பல விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.