Ads Area

சம்மாந்துறை திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் பைக்கிள் மீட்பு ;ஒருவர் கைது.

 


 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஜனவரி மாதம் 14ம் திகதி  சுமார் 8இலட்சத்திக்கும் மேல் பெறுமதி வாய்ந்த "Bajaj pulsar Ns 200" என்ற வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக  சைக்கிள் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் 16ம் திகதி முறைப்பாடு  செய்யதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார்  பைக்கிளை நேற்று(28) மீட்டதுடன்  திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe