காரைதீவு சகா.
சம்மாந்துறை வீரமுனையில் பாரம்பரிய புதிர் எடுக்கும் நிகழ்வு அண்மையில் வீரமுனை வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வானது ஆலய பிரதமகுரு சிவ சிஸ்ரீ கிஸோ வேந்தன், சர்மா மற்றும் சிவசிஸ்ரீ முரளிதரன் ஐயா ஆகியோர் தலைமையில் ஆலைய பரிபாலன சபையினரின் ஒத்துழைப்புடனும் இடம் பெற்றது.
தைப்பூச நன்னாளில் தமிழ் பாரம்பரியம் கொண்டு மாடு கட்டி மாட்டு வண்டியிலே ஸ்ரீ வழிப்பாட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து விநாயகப்பெருமானின் அருளாசியுடன் தைப்பூச நன்னாளில் வயல் வெளிக்குச்சென்று புண்ணியாங்கம் செய்யப்பட்டு விவசாயிகளின் அறுவடை சிறப்புடன் நடக்க அந்த சூரியபகவானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெற்கதிர் அறுத்து புதிர் எடுக்கும் நிகழ்வு சிறப்புடனே நடந்தேறியது.
அதனைத்தொடர்ந்து ஸ்ரீ வழிப்பாட்டுப்பிள்ளையாருக்கும் ஆலயத்தில் அமைந்த பால முருகனுக்கும் சிறப்பு தைப்பூச நாளுக்கான பூஜைகளும் நடைபெற்று அடியவர்களுக்கும் புதிர் கொடுக்கப்பட்டது.
Pic - Battinews.