சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட முஅல்லா மஹல்லா மையவாடி முழு நாளாக நேற்று(28) சிரமதானம் செய்யப்பட்டது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஸ்சூறா மற்றும் முஅல்லா மஹல்லா நிர்வாகிகள் இணைந்து மேற்கொண்ட சிரமதான பணியில் பிரதேச வாசிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலையில் இருந்து மாலை வரை தொடர்ச்சியாக இடம்பெற்ற சிரமதான பணியில் குறித்த மையவாடியில் பெரும்பகுதியான நிலப்பரப்பு சுத்தம் செய்யப்பட்டது.