தகவல் - Muhammed Nasim
சம்மாந்துறை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நெய்னாகாடு பிரதேசவாசிகளுக்கு கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் முஸாரப் அவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 14 ம் திகதி நெய்னாகாடு அல் அக்சா வித்தியாலத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல் , வைத்தியர் ஏ.எம் றஷீட், ஓய்வுபெற்ற விவிசாய உதவி பணிப்பாளர் ஐ.ஏ.ஜப்பார், கிராம சேவை உத்தியோகத்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.