சவுதி அரேபியாவில் சூடான் நாட்டவர் ஒருவரை கொலை செய்தமைக்காக 4 எத்தியோப்பியர்களுக்கும் இந்தியர் ஒருவரைக் கொலை செய்தமைக்காக 2 பங்களாதேசவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களோடு தொடர்புடைய 4 எத்தியோப்பிய நாட்டவர்கள் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அவருடைய கால்-கைகளை கட்டி அடித்து துன்புறுத்தி, வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இவர்கள் 4 பேரையும் வழிப்பறி, கொலை முயற்சி, துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தல் போன்ற குற்றச் செயல்களில் அடிப்படையில் கைது செய்த சவுதி பொலிஸார் விசாரனையின் பின் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு பின்னர் உச்ச மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களால் அவர்களது குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் நான்கு பேருக்கும் கடந்த புதன் கிழமையன்று (31) ரியாத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன், சவுதி அரேபியாவில் வசித்து வந்த இரண்டு பங்களாதேசைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் வாயில் பூச்சி மருந்தை தெளித்து இந்தியர் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பணம் கொடுக்கல் வாங்களோடு தொடர்பான கருத்து வேறுபாடு ஒன்றின் காரணமாக இரு பங்களாதேஷ் நாட்டவர்களும் இந்தியரை கார் ஒன்றில் ஆள்நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பின்னால் இருந்து துணியால் கழுத்தை நெரித்து, பூச்சிக் கொல்லி மருந்தை பருகச் செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கும் துாக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.