Ads Area

முதலாவது காணிச் சுதந்திரத்தை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்த சம்மாந்துறை பிரதேச செயலாளர்S.L. முஹம்மது ஹனீபா தலைமையிலான குழுவினர்.

இலங்கை அரசானது சுதந்திரத்திற்கு பின்னர் காணிக்கான பூரண சுதந்திரம் மிக்க அளிப்பு பத்திரங்களை வழங்கும் வேலை திட்டத்தின் கீழ் 20 லட்சம் அளிப்பு பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன் முதலாவது அளிப்பினை பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளவர் சம்மாந்துறை சேர்ந்த மு.த. குழந்தையும்மா (FGR/52/28/01)ஆவார். இது இலங்கை வரலாற்றில் சம்மாந்துறை பிரதேசம் பெற்றுக் கொள்ளும் கௌரவம் ஆகும்.


சம்மாந்துறை பிரதேச செயலகம் ஒப்பீட்டளவில் பல்வேறு முன்மாதிரியான செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்வதில் முன்நிற்கின்றது. நாடளாவிய ரீதியில் முதலாவது ASWASMA (நலன்புரி நன்மைகள் சபை) காரியாலயம் திறக்கப்பட்டது சம்மாந்துறை பிரதேச செயலகத்திலேயே. அதேபோன்று උරුමය வேலைத் திட்டத்திற்கு தனியாக பிரிவு தாபிக்கப்பட்டதும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திலேயே.


அதே போன்று ஒரே தடவையில் 711 பயனாளிகளுக்கு ஒரே தடவையில் பூரண சுதந்திர அளிப்பு வழங்க நடவடிக்கை எடுத்ததும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனீபா அவர்கள் தலைமையிலான பிரதேச செயலகமே ஆகும்.


இதனால் மக்களுக்கு உரிய சேவைகள் விரைவாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.


இலங்கை அரசின் பூரண சுதந்திரத்துடன் காணிக்கான அளிப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தலைமை தாங்கிய வழிநடாத்திய பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனிபா அவர்கள், இதனை முன்னெடுத்துச் சென்ற உதவி பிரதேச செயலாளர் U.M. அஸ்லம் அவர்கள் விரைவாக ஆவணத் தயாரிப்புக்களை மேற்கொண்ட பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் T.K.M.சவாஹிர், I.L.லாபிர் மற்றும் காணிப்பிரிவு தலைமை முகாமைத்து உத்தியோகத்தர் திருமதி S.A.  நபீறா உட்பட சகல உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.


இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


அதேபோன்று விரைவாக இலக்கினை அடைய நடவடிக்கை எடுக்க உதவிய கிழக்கு மாகாண காணித் திணைக்களம், மாகாணங்களுக்கு இடைப்பட்ட மாவட்ட காணி ஆணையாளர், நில அளவை திணைக்களம்,மாவட்ட (கல்முனை) காணிப்பதிவாளர் திணைக்களம் என்பனவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.


இவ் ஆவணம் வழங்கும் நிகழ்வு 05.02.2024 ம் திகதி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் கெளரவ காணி அமைச்சர் ஹரிண் பெர்ணான்டோ தலைமயில் இடம்பெற்றது.


இதில் கெளரவ சனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அளிப்புக்களை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், காணி உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்நிகழ்வில் ஏனையோருக்கான அளிப்புக்களை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் A.L.M.அதாவுல்லாஹ் அவர்களும் வழங்கி வைத்தார்கள்.


ஊடகப் பிரிவு.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe