ஓட்டமாவடி பாலத்தின் அருகில் முஸ்லிம் சமூகத்தின் கலாசார, விழுமியங்களைச் சீர்குலைக்கும் வகையில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடாக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓட்டமாவடி பாலத்தின் அருகில் 76வது சுதந்திர தின நிகழ்வினையொட்டி இன, மத நல்லிணக்கம் என்ற பெயரில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் கலாசார, பண்பாட்டிற்கு விரோதமான நடன இசை நிகழ்ச்சிக்கெதிராக பலத்த கண்டனக்குரல்கள் குறித்த பிரதேச சிவில் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொது மக்களிடையே எழுந்து வரும் நிலையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடாக்கிளை 2024.02.05ம் திகதியன்று தமது கண்டன அறிக்கையினை வெளியீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.