சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியினை புரணமைப்புச் செய்யும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் கட்சியில் தலைவரின் பணிப்புரைக்கு அமைய இடம்பெற்று வருகின்றமையினை ஒட்டி சம்மாந்துறை பிரதேசத்திலும் கட்சியின் புணரமைப்புப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேசத்தின் நகர வட்டாரத்தில் 5ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளை புணரமைப்பு கூட்டம் சிரேஸ்ட சட்டத்தரணியும்,பிரதேச சபை முதன்மை வேட்பாளருமான யு.கே.சலீம் தலைமையில் அண்மையில் 05.02.2024 சம்மாந்துறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர்,பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும்,கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும்,கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினறுமான ஏ.சீ.சமால்டீன்,அரசியல் அதிஉயர்பீட உறுப்பினரான ஏ.எம்.ஏ.அஸீஸ்,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.