(எஸ்.அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர், ஐ.எல்.எம்.நாஸீம்)
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Harvest-2023ம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (21) பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்றுச்சென்ற மற்றும் இடமாற்றலாகிச்சென்ற உத்தியோகத்தர்களைக் கௌரவித்து நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சா/த, உ/தரப்பரீட்சைகளில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் கெளரவிக்கப்படனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்தோடு, கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.யோகதீசன், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், பிரதம கணக்காளர் ஏ.எல்.ஆதம்பாவா, பிரதம பொறியியலாளர் ஏ.பி சாஹீர், மாவட்ட உள்ளக பிரதம கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள்,
சம்மாந்துறை பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
உத்தியோகத்தர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேரப்பட்டதுடன், போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசீல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.