தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசானாயகவை இந்திய அரசு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தமை இலங்கை அரசியலின் புரட்சிகரமான மாற்றம் எனலாம். கட்சிக்கு கிடைத்த முதலாவது இந்திய ராஜதந்திர தொடர்பு இதுதான். NPP தலைவர் பிப்ரவரி 5ஆம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெயசங்கருடனான சந்திப்புடன் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். முன்னெப்போதும் இல்லாத இந்த எட்டு, இரு தரப்பு தொடர்புகளை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி குறிப்பாக பிராந்தியத்தின் பொருளாதார சக்திகளான சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொடர்புகளை வைத்துக் கொள்வதில் NPP யின் சர்வதேச மூலோபாய தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை படம் பிடித்து காட்டுகின்றது.
ராஜதந்திர தொடர்பு விரிவாக்கம் மற்றும் இரு தரப்பு தொடர்புகள்.
அனுர குமார திசானாயக்கவின் இந்திய சுற்றுப்பயணம் இலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தலை அண்மித்த மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் ஒன்றில் நடந்திருக்கின்றது. இந்தியாவின் ராஜதந்திர அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடரில், இரண்டு நாடுகளும் பலமான தொடர்பை பேணுவதன் முக்கியம் வலியுறுத்தப்பட்டது. பொருளாதாரத் தொடர்புகளை பலப்படுத்துவது மட்டுமின்றி, தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் உடைய ஒரே மற்றும் பலமான பிரதான அரசியல் இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை இந்தியா ஏற்றுக் கொள்கின்றது என்ற சமிக்ஞை, இலங்கையின் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் இந்தியா கொடுத்துள்ளது. அனுர குமார திசாநாயக்கவின் கருத்துப்படி, நாடுகள் தனித்தனி நபர்களுடன் தொடர்பாடல்களை பேணுவதில்லை. அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியுடனேயே தொடர்பாடலை வைத்திருக்கும். ரணில் விக்ரமசிங்ஹவை ஜனாதிபதியாக நியமிக்கும் பொழுது, ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு அவரைத் தவிர வேறு யாருக்கும் முடியாது என்று மொட்டு கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அது ஒரு வெற்றுப் பேச்சு மட்டுமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக இன்று இலங்கையின் மிகச் சொற்பமான சிலர் ஆட்டின் ஏதோ ஒன்று விழும் வரை பார்த்துக் கொண்டிருப்பது போன்று கோட்டாபய வாக்குறுதியளித்த சௌபாக்கியத்தை ரணில் விக்கிரமசிங்க 2048 இல் கொண்டு வரும் வரை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். மிக விரைவில் அது பகல் கனவு என்று தெரியவரும்.
அணிசேரா ராஜதந்திரம் : சீன இந்திய அதிகார சமநிலை.
அணி சேரா வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையிலேயே NPP யின் ராஜதந்திர மூலோபாயம் வகுக்கப்பட்டுள்ளது. சீன மற்றும் தற்போதைய இந்திய சுற்றுப்பயணங்களில் இந்த இரண்டு வளமான பொருளாதாரங்களுக்கும் இடையிலான நுணுக்கமான சமநிலையை பேணிக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிகின்றது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுடனும் தொடர்புகளை பேணி உலக அரங்கில் இலங்கையின் நலன்களை பாதுகாத்துக் கொண்டு நடைமுறை சாத்தியமான மற்றும் உயிர் துடிப்புள்ள வெளிநாட்டு கொள்கை ஒன்றை கொண்டுள்ள கட்சியாக NPP அமைந்திருக்கின்றது.
ராஜதந்திர திறனும் தலைமையும்.
சீன அரசின் அழைப்பின் பேரில் 2023 டிசம்பர் மாதம் அனுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு செய்த உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் அவரது சர்வதேச கூட்டணிகளை கட்டி எழுப்பும் திறனை காட்டுகின்றது. சிக்கல் நிறைந்த உலக அரசியலுக்குள் சுற்றி தெரியும் அவரது ராஜதந்திர திறனை இந்தியாவும் அங்கீகரித்து இந்திய அரசின் அழைப்பு ஒன்றை பெற்றமை அவரது தூர நோக்கையுடைய தலைமைத்துவத்தை இன்னும் மேம்படுத்துகின்றது. இந்த ராஜதந்திர நுணுக்கம் NPP யின் நம்பகத் தன்மையை அதிகரிப்பதோடு இலங்கையை மீள கட்டியெழுப்பும் புதிய மீழ் எழுச்சி யுகத்துக்கு கொண்டு செல்வதற்கு உரிய திறனை உடைய ஒரே தலைவராக அனுர குமார திசாநாயக்க சரியான இடத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சர்வதேச ஏற்புடையமை : சந்தேகங்களை தீர்த்தல்.
பிராந்தியத்தின் அரசுகளுடன் அனுரகுமார திசநாயக்க உயிர்பாக சம்பந்தப்படுவதன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக் கொள்வதற்கு NPP க்கு உள்ள திறமை பற்றிய பிழையான கருத்துகளை தவிடுபொடியாகக்குகிறார். ராஜதந்திர வெற்றிகளில் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக NPP யின் அர்ப்பணிப்பை சர்வதேசம் ஏற்றுக்கொள்கின்றது என்பதையும் நிரூபிக்கிறார். இது மூலமாக இலங்கைக்கு தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு அனுர குமார திசநாயவுக்கு இருக்கும் திறமை பற்றிய சந்தேகங்களை தீர்ப்பதோடு சர்வதேச ஒத்துழைப்பை தனி மனிதர்களுக்கு அல்லாமல் மக்கள் விருப்புடன் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வரும் அரசு ஒன்றுக்கே கிடைக்கும் என்பதையும் நிரூபிக்கிறார்.
முடிவு.
அனுர குமார திசானாயக்கவின் இந்திய சுற்றுப்பயணம் பூகோள அரங்கில் NPP மற்றும் இலங்கைக்கான பாரிய முன்னோக்கிய பாய்ச்சலை குறித்து நிற்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் வெளிப்படுத்தப்பட்ட மூலோபாய செயற்பாடுகள் மற்றும் ராஜதந்திர நுட்பங்கள் இருதரப்பு உறவை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான பங்காளியாக NPP யை நிலைப்படுத்துகின்றது இலங்கை மக்கள் தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் பொழுது NPP பெற்றுக் கொள்ளும் சர்வதேச வரவேற்பு இலங்கையின் சர்வதேச தொடர்புகளை புதிய யுகம் ஒன்றை நோக்கி கொண்டு சென்று சர்வதேச ராஜதந்திர உறவு பின்னலுக்குள் சென்று இயங்குவதற்கும் உயிர்ப்பாக பங்கெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்திக்கு முடியும் என்ற பலமான செய்தியை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த சுற்றுப்பயணம் சொல்லி நிற்கின்றது.
சாந்த ஜயரத்ன
உறுப்பினர், NPP கொள்கை வகுப்பு பிரிவு
முன்னால் சிரேஷ்ட ஆலோசகர்.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் (SLIDA)
05.02.2024
shantha323@gmail.com