செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்.
இந்த நிகழ்வு இன்று சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட சல்மடு கண்டத்தில் மத கலாச்சார விழுமியங்களுடன் ஆரம்பம் செய்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் அறுவடை ஆரம்ப நிகழ்வும், ஒருங்கிணைந்த தாவரப்போசணை முகாமைத்துவ அறுவடை விழாவும் இடம்பெற்றது.
சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி MTM நளீர் அவர்களின் தலைமையில் சல்மடுக் கண்ட விவசாயிகளின் பூரண ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இந்திகழ்வில் சமய ஆராதனையின் பின்னர் துஆ பிரார்த்தனையுடன் அதிதிகளினால் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் - லக்மல். உதவி விவசாயப்பணிப்பாளர்- சமந்த குமார பாடவிதான. உத்தியோகத்தர்- ஜெய்லாப்தீன். கம நல அபிவிருத்தி உத்தியோகத்தர்- சஞ்ஜீவ. சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர்- முஹமட் சம்மாந்துறை மஜ்லிஷ் அஷ்ஷூராவின் தலைவர் , முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்- அமீர். நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்- ஹனீபா விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல அதிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.