Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலவச கண்புரை (கட்ரட்) சத்திர சிகிச்சை முகாம் !!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் குழுவினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சைகள் கடந்த 23.02.2024ம் திகதி மேற்கொள்ளப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு இவ் இலவச கண்புரை சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. 


இங்கிலாந்து Assist RR நிறுவனத்தின் தலைவர் சர்வீஸ் வரன் அனுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சத்திர சிகிச்சை முகாம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஸாத் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  சகீலா ராணி இஸ்ஸதீன், விசேட அதிதிகளாக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தெளபீக், கண்நோய் விசேட வைத்திய நிபுணர் தேசப்பிரிய டயஸ், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தினர் மற்றும் நன்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


இவ்வாறான இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் காலாண்டுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.


ஊடக பிரிவு

அபிவிருத்தி குழு - 

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe